முகப்பு
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளின் சவால்களைக் களைவதே நம் கடமை: மு.க. ஸ்டாலின் பதிவு!

சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Updated On : 3 டிசம்பர், 2024 at 6:24 AM
கோப்புப் படம்
பகிர்:

சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை, அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்வதுடன் அவர்களை மேம்படுத்த உதவுவதுடன் அவர்களுக்கான உரிமைகளையும் கிடைக்கச் செய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.

இந்நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில்,

'அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக ஐ.நா. அறிவித்துள்ளது!

அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.

சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை!' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.