அயினம் பாளையம் ஈடுபட்ட மக்கள்.  
தமிழ்நாடு

விழுப்புரம்: இரு இடங்களில் சாலை மறியல்!

விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் மக்கள் சாலை மறியல்.

DIN

விழுப்புரத்தில் அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் நிவாரண உதவிகள் ஏதும் வழங்கவில்லை, கடந்த 4 நாள்களுக்கு மேலாக மின் விநியோகம் இல்லை, சரியான முறையில் உணவு வழங்கவில்லை, குடிக்க குடிநீர் வழங்கவில்லை, மழையால் பொருள்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தங்களை பார்த்து ஆறுதல் கூற யாரும் வரவிலலை எனக் கூறி சுற்றுவட்டார மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ - அன்னியூர் சிவா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் - இருவேல்பட்டு பகுதியில்...

இதுபோல - திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவேல்பட்டு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

SCROLL FOR NEXT