கோப்புப்படம். 
தமிழ்நாடு

திருவண்ணாமலை தீபத் திருவிழா- 9 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

வாயுக்கசிவை சரிசெய்ய தொட்டிக்குள் இறங்கிய ஊழியர் பலி!

இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி அம்மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தீபத்திருவிழா பாதுகாப்பிற்கு வருகைதரும் காவலர்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் தங்கவிருப்பதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT