அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு கழற்சிவலுப்பெற்று சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச. 8) மேலும் வலுப்பெறும். அதைத் தொடர்ந்து, இது மேலும் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து டிச.11-ஆம் தேதிக்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) முதல் டிச. 13-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.