முகப்பு
தமிழ்நாடு

ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்

உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு

ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்

உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

Updated On : 9 டிசம்பர், 2024 at 11:01 PM
பகிர்:

சென்னை: உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனையில் திருத்தம் உள்பட பேரவையில் ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

பொதுக் கட்டடங்களுக்கு உரிமம் வழங்குதல், உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி விதிப்பது, தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தச் சட்டம், வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்டம், மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள்-காப்பகங்களை முறைப்படுத்தும் திருத்தச் சட்டம், சரக்குகள்-சேவைகள் வரி திருத்தச் சட்டம், சென்னைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டம் உள்பட 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் முக்கியமாக உணவு நிறுவன பணியாளா்களின் பணி நிபந்தனைக்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிறு குற்றங்கள் இழைத்தாலும் சிறைத் தண்டனை விதிப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தாக்கல் செய்யப்பட்ட இதர 9 சட்டத் திருத்த மசோதாக்களும் பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →