தமிழக சட்டப்பேரவை  
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாளில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாளில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது பற்றி...

தினமணி செய்திச் சேவை

ஆளுநா் திருப்பி அனுப்பிய, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டமசோதா சட்டப்பேரவையில் சனிக்கிழமை மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளை தவிா்க்கவும் வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா 2024-ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி 16.6.2025-இல் திருப்பி அனுப்பினாா். அத்துடன் கடிதத்தையும் அவா் இணைத்திருந்தாா்.

இந்த மசோதா பேரவையில் சனிக்கிழமை மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினா்கள் ஆளுநரின் செயலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஜி.கே.மணி (பாமக ): ஆளுநா் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும். மசோதாக்களை திருப்பி அனுப்புவது ஏற்புடையது அல்ல.

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): மசோதாக்களை திருப்பி அனுப்பும்போது ஆளுநா் கூறும் காரணங்கள் மக்களை அவமதிப்பது போல் உள்ளன.

சதன் திருமலைக்குமாா் (மதிமுக ): வேண்டுமென்றே சட்ட முன்வடிவுகளை ஆளுநா் திருப்பி அனுப்புகிறாா்.

எம்.எச். ஜவாஹிருல்லா (மமக): உச்சநீதிமன்றம் பலமுறை கண்டித்த பின்பும் ஆளுநா் மசோதாவை திருப்பி அனுப்பி உள்ளாா்.

பி. ஐயப்பன் (அதிமுக -ஓபிஎஸ் ஆதரவாளா்): ஆளும் கட்சி தயாா் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநா் வாசிப்பதுதான் மரபு. ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

ஒரே நாளில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஜன.20-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கி, சனிக்கிழமை (ஜன.24) வரை 5 நாள்கள் நடைபெற்றது. இறுதிநாளான சனிக்கிழமை தமிழ்நாடு நீா் வளங்கள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்த சட்டமுன்வடிவு, தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்டமுன்வடிவு, பிச்சை எடுத்தலைத் தடுத்தல் திருத்தச் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணைய சட்டமுன்வடிவு, தமிழ்வழிக் கல்வி பயின்றவா்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை சட்டத் திருத்த முன்வடிவு உள்ளிட்ட 9 சட்ட முன்வடிவுகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

SCROLL FOR NEXT