கோப்புப்படம். 
தமிழ்நாடு

சென்னையில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

DIN

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

117 பயணிகளுடன் சென்னையில் இருந்து கொச்சிக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து பொறியாளர்கள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து வருகின்றனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தில்லி-ஷில்லாங் இடையே இயங்கும் மற்றொரு ஸ்பைஸ் ஜெட் விமானமும் தொழில்நுட்ப கோளாறால் பாட்னாவுக்கு திருப்பிவிடப்பட்டு தரையிறங்கியது.

இதுகுறித்து பாட்னா விமான நிலைய இயக்குனர் கூறியதாவது, இது ஒரு சாதாரண தரையிறக்கம், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

காவிரி டெல்டா பகுதியில் தொடர் மழை: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் அழிப்பு! எல்லைப் பாதுகாப்புப் படை

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT