முகப்பு
தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு எப்போது?: அமைச்சா் பதில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதிலளித்தாா்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 10:45 PM
ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
பகிர்:

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதிலளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடா்பான துணை வினாவை அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜு எழுப்பினாா். இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:

வீர வசந்தராயா் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அந்த மண்டபத்துக்கு சுமாா் 25 அடி நீளம் கொண்ட கற்தூண்கள் தேவைப்படுகின்றன. ஒரே அளவில் அவை கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்தப் பணிக்காக ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. வீரவசந்தராயா் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்குப் பணியும் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும். கோயிலில் 63 திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிச்சயமாக குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →