மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட்டில் முறைகேடு: 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசன டிக்கெட் முறைகேடு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோயில் அலுவலர்களை கண்காணிக்க கோயில் முழுவதும் மொத்தம் 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசன் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு தலா ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு நாட்களுக்கு முன் தரிசன டிக்கெட் கொடுக்கும் பணியில் பேச்சி என்ற ஊழியரும், சுவாமி சன்னதியில் டிக்கெட்டுளை பரிசோதிக்கும் பணியில் சிவராஜ் என்பவரும் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் தரிசன டிக்கெட் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பக்தர்கள் தரிசனத்துக்கு வழங்கும் டிக்கெட்டுகளை சிவராஜ் கிழிக்காமல் தானே பதுக்கி வைத்துக்கொண்டு, அதை தரிசன டிக்கெட் கொடுக்கும் ஊழியரிடம் கொடுத்து வந்ததும், அதை மீண்டும் பக்தர்களிடம் கட்டணம் வாங்கிக்கொண்டு புது தரிசன டிக்கெட் போல் வழங்கியுள்ளனர்.
இதேபோன்று ரூ.பல ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகளை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோயில் ஊழியர்கள் இருவரையும் கோயில் இணை ஆணையர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கோயில் ஊழியர்களை கண்காணிக்கவும், பாதுகாப்பு கருதி கோயில் முழுவதும் தற்போது 174 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களின் தரிசன் டிக்கெட்டுகளை விற்று ரூ.பல ஆயிரம் மோசடி செய்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
malpractice in darshan tickets at Madurai Meenakshi Amman Temple: 2 employees suspended