மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தது பற்றி...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
மதுரை வந்துள்ள முதல்வர் விஜய், இன்று காலை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த அவர், மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் சென்றார். விருந்தினர் மாளிகையில் அவருக்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார் முதல்வர் விஜய்.
விருந்தினர் மாளிகையில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரை திறந்த வேனில் சாலைவலம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் சால்வை வழங்கி முதல்வரை வரவேற்றார்.
தொடர்ந்து முதல்வர் விஜய், கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
முதல்வர் வருகையையொட்டி, சில மணி நேரத்திற்கு முன்னதாகவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay offers prayers at the Madurai Meenakshi Amman Temple
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.