முகப்பு
ஏர் இந்தியா
தமிழ்நாடு

சென்னையில் ஏர் இந்தியா விமானம் தாமதம்! பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி.

தமிழ்நாடு

சென்னையில் ஏர் இந்தியா விமானம் தாமதம்! பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:53 AM
ஏர் இந்தியா
பகிர்:

சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் புறப்பட தாமதம் ஆகியுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை 11.55 மணிக்கு 145 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்படவிருந்தது.

விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, விமானத்தில் பெட்ரோல் கசிந்தது தெரிய வந்ததையடுத்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டது.

எனினும் மாலை 4 மணி வரை விமானம் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மாலை 6.15 மணியளவில் புறப்படத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னதாக பெட்ரோல் கசிந்தது கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →