நடிகர் ரஜினி கோப்புப்படம்
தமிழ்நாடு

பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினி நன்றி!

தனக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

தனக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர முதல்வர் நண்பர் சந்திரபாபு நாயுடுக்கும், மற்றும் ஓ.பன்னீர் செல்வம், வைகோ, வி.கே.சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், வாசன், ஏ.சி.சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரையுலகத்திலிருந்து நண்பர் கமலஹாசன், வைரமுத்து, S.P.முத்துராமன், விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையை செலுத்திய ஸ்பைஸ் ஜெட்!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி அவருக்கு பல்வேறு பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

மோா்தானா அணையிலிருந்து 2,300 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்

இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

முதல்வா் கோப்பை போட்டிகள்: சென்னை முதலிடம்! பெனி குவேபா, காவ்யாவுக்கு தங்கம்!

மழை ஆடியதால் ஆஸி.-இலங்கை ஆட்டம் ரத்து!

SCROLL FOR NEXT