கனமழை: தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்!
மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து ரயில்கள் இயக்கம்...
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருப்பதால் அங்கிருந்து இன்று(டிச. 14) புறப்படும் முக்கிய ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படுமென்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ்(16235) புறப்படும் நேரம் இரவு 8.25 மணி,
தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ்(12694)
புறப்படும் நேரம் மாலை 5.15 மணி,
தூத்துக்குடி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்(16791)
புறப்படும் நேரம் இரவு 10 மணி,
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ்(16766)
புறப்படும் நேரம் இரவு 10.50 மணி,
ஆகிய விரைவு ரயில்கள் இன்று(டிச. 14) ஒருநாள் மட்டும் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படும்.
ரயில்கள் ரத்து:
தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில்(06667) புறப்படும் நேரம் மாலை 6.25 மணி,
தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில்(06847) புறப்படும் நேரம் இரவு 10.30 மணி,
வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பயணிகள் ரயில்(06672) புறப்படும் நேரம் இரவு 8.25 மணி, ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.