ரஜினிகாந்த் / குகேஷ் கோப்புப் படம்
தமிழ்நாடு

குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குகேஷை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து உரையாடினார். அப்போது ரஜினிகாந்துக்கு குகேஷ் நன்றி கூறினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் 32 வயதான டிங் லிரெனை வீழ்த்தி 18 வயதான குகேஷ் வெற்றி பெற்றார்.

இதன்மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 13) நடந்த பரிசளிப்பு விழாவில் சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேஷுக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.11.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குகேஷுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் குகேஷை இன்று (டிச. 15) தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரின் பெற்றோர் குறித்தும் கேட்டறிந்தார். ரஜினிகாந்த் உடன் பேசிய குகேஷ், அவருக்கு நன்றி கூறினார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT