நாகையில் குளோரின் சிலிண்டரில் கசிவு  படம்| தினமணி
தமிழ்நாடு

நாகை: குளோரின் சிலிண்டரில் கசிவு - தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!

சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட நிலையில், அதனைக் கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மயக்கம்!

DIN

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நகராட்சி நீர்த்தேக்கத் தொட்டியில் பயன்படுத்தப்படாத குளோரின் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட நிலையில், அதனைக் கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவர் மயக்கமடைந்தனர்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே நீர்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீரில் கலப்பதற்காக குளோரின் சிலிண்டர்கள் 5 அங்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிலிண்டர்கள் பல நாள்களாக பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் குளோரின் சிலிண்டர் ஒன்றிலிருந்து கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மூச்சு த்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கசிவை கட்டுப்படுத்தினர். அப்போது 2 வீரர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே, நிகழ்விடத்திற்கு நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீனா சைமன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் பயன்படுத்தப்படாத மேலும் 4 குளோரின் சிலண்டர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நீர்தேக்கத் தொட்டி பகுதியில் வைக்கப்பட்டுள் 5 சிலண்டர்களால் எப்போது வேண்டுமானலும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT