முகப்பு
தமிழ்நாடு

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு ஞாயிற்றுகிழமை முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 15 டிசம்பர், 2024 at 12:34 PM
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை.
பகிர்:

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு ஞாயிற்றுகிழமை முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

15 காவலர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு அரசு மரியாதை செலுத்தினர். மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் 48 குண்டுகள் முழங்க சுட்டு அரசு மரியாதை செய்தனர்.

ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தலைமையில் இந்த அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இரங்கல் கூட்டத்துக்குப் பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சனிக்கிழமை காலமானார்.

பின்னர் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →