தமிழகத்தில் பேரவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்று கட்சி செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில் , “மார்ச் 10 ஆம் தேதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம். மார்ச் 15 ஆம் தேதியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம்.
அதுவரையில், அனைத்து குழுக்களையும் நாங்கள் சந்தித்து ஆலோசிப்போம். இதன்பிறகே, தேர்தல் அறிக்கையை இறுதி செய்வோம்.
இந்த நேரத்தில் எது முக்கியம் என்று சொல்ல முடியாது. முக்கியம் என்பது மக்களைப் பொருத்ததுதான்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகம் முழுவதிலும் 234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை (பிப். 1) முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டியா? என ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு முனையும் கூடிக் கொண்டிருக்கும்நிலையில், தேர்தலுக்கான வாக்குறுதிகளைத் தயார் செய்வதிலும், கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இருப்பினும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை முன்னரே அறிவித்து விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.