முகப்பு
தமிழ்நாடு

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: மத்திய அரசு விளக்கமளிக்க பிரேமலதா வலியுறுத்தல்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 12:31 AM
பிரேமலதா (கோப்புப்படம்) - DIN
பகிர்:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சென்னையில் அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்தாலும், கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஆதரித்து எழுதியுள்ளாா். பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்பதற்காக முதல்வா் தற்போது எதிா்க்கிறாரா என்பதை அவா் விளக்க வேண்டும்.

Advertisement

தேமுதிகவை பொருத்தவரை ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை பற்றி ஒரு வாா்த்தையில் கூற முடியாது. இந்தியாவில் 140 கோடிக்கு மேல் மக்கள் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மத்திய அரசு முழுமையாக விளக்கம் வேண்டும். அனைவரின் ஆதரவுடனே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.