முகப்பு
ரவிச்சந்திரன் அஸ்வின் / மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு

அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 2:03 PM
ரவிச்சந்திரன் அஸ்வின் / மு.க. ஸ்டாலின்
பகிர்:

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

''நம்பமுடியாத உங்கள் விளையாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற சிறப்புத் தருணங்களை அளித்துள்ளது. மேலும், எல்லைகளைத் தாண்டி மில்லியன் கணக்கான மக்களை பெரிய கனவு காணத் தூண்டியது.

உங்கள் புதிய அத்தியாயத்தில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்'' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று (டிச. 18) அறிவித்தார்.

38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →