தமிழ்நாடு

கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!

கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று(புதன்கிழமை) தொடக்கிவைத்தார்.

DIN

தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று(புதன்கிழமை) தொடக்கிவைத்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கி விற்பனையைத் தொடக்கிவைத்தார்.

இதன்படி இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 199 -க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு:

இதில் பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருள்கள் உள்ளன.

ரூ. 499 -க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு

மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்ட தொகுப்பாகும்.

ரூ. 999 பெரும் பொங்கல் தொகுப்பு

மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT