மேட்டூர் அனல் மின் நிலையம் 
தமிழ்நாடு

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து! 2 பேர் பலி

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து நேரிட்டது.

DIN

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது 50 அடி உயரத்திலிருந்து நிலக்கரி சேமிப்புத் தொட்டி உடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார் (22), சீனிவாசன் (42), முருகன் (25): கௌதம் (24) ஆகிய ஐந்து பேரும் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அனல் மின் நிலைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் காயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இடர்பாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்ற கோணத்தில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிந்து விழுந்த தொட்டியை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விபத்து குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT