தமிழ்நாடு

வள்ளுவர் சிலையை 'பேரறிவுச் சிலை'யாகக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை 'பேரறிவுச் சிலை'யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

DIN

குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை 'பேரறிவுச் சிலை'யாகக் கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு வெள்ளி விழா கொண்டாடவிருக்கிறது.

வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கன்னியாகுமரியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் - கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் - ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள், மாவட்ட நூலகங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

'சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!

மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த சிலையை 'பேரறிவுச் சிலை'(Statue Of Wisdom)-ஆகக் கொண்டுவோம்!' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

SCROLL FOR NEXT