முகப்பு
தமிழ்நாடு

தொடா் விடுமுறை: விமான கட்டணம் பல மடங்கு உயா்வு

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது.

Updated On : 22 டிசம்பர், 2024 at 12:11 AM
பகிர்:

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடா் விடுமுறையால் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூரு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்ளூா் விமானங்கள் மற்றும் சிங்கப்பூா், கோலாலம்பூா், தாய்லாந்து, துபை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் சா்வதேச விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயா்ந்துள்ளது.

விடுமுறை நாள்களில் விமானக் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளதால் முன்பதிவு செய்ய இருந்த பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

உள்நாட்டு விமான கட்டணங்கள் (அடைப்புக் குறிக்குள் வழக்கமான கட்டணம்):

சென்னை - தூத்துக்குடி ரூ. 14,281 (ரூ. 4,796).

சென்னை -மதுரை ரூ. 17,695 (ரூ.4,300).

சென்னை - திருச்சி ரூ. 14,387 (ரூ.2,382)

சென்னை - மைசூரு ரூ. 9,872 (ரூ.3,432)

சென்னை - கோவை ரூ. 9,418 (ரூ.3,485)

சென்னை - சேலம் ரூ. 8,007 (ரூ .3,537).

சென்னை - திருவனந்தபுரம் ரூ.13,306 (ரூ.3,821)

சென்னை - கொச்சி ரூ.18,377 (ரூ.3,678)

சா்வதேச விமான கட்டணங்கள்:

சென்னை - சிங்கப்பூா் ரூ. 16,861 (ரூ. 7,510)

சென்னை - கோலாலம்பூா் ரூ. 33,903 (ரூ.11,016)

சென்னை - துபை ரூ. 26,752 (ரூ.12,871)

முழு கட்டுரையைப் படிக்க →