கோப்புப் படம் 
தமிழ்நாடு

விராலிமலை, இலுப்பூர், அன்னவாசலில் 107 மி.மீ. மழைப்பொழிவு!

விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் சனிக்கிழமை ஒரே நாள் இரவில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

DIN

விராலிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை ஒரே நாள் இரவில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை பெய்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்ந்த நிலையில், சனிக்கிழமை (டிச. 21) நள்ளிரவு திடீரென்று பெய்த இம்மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளிர்ந்த சீதோஷண நிலையுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

விராலிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன், பெஞ்சால் புயல் தாக்கத்தினால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷண நிலை நிலவி வந்தது. இருப்பினும், எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லை; அதற்கு மாறாக கடந்த வாரத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதுவும் சில நாள்களிலேயே நின்றதால், மூன்று நாள்களாக வழக்கம்போல் சீதோஷ்ணநிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இரவு 107 மி.மீ. மழை பெய்ததால் அப்பகுதிகள் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது.

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்தது இதில், விராலிமலையில் 17 மி.மீ.,அன்னவாசலில் 31 மி.மீ., குடுமியான்மலையில் 14 மி.மீ., இலுப்பூரில் 45 மி.மீ. என 107 மி.மீ. (10.7 செ.மீ.) மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT