தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலிலிருந்து கிரேன் மூலம் லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகள். 
தமிழ்நாடு

தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்!

தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும் என்று வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் கூறினார்.

DIN

தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித் இதுகுறித்து தூத்துக்குடி வ.உசி. துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25ஆம் நிதியாண்டில், இதுவரை 29.70 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு 1.87 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் 6.74 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது.

306 மீட்டர் நீளம், 14.20 மீட்டர் மிதவை ஆழமுள்ள பெரிய கப்பல்களைக் கையாள வசதியாக, வடக்கு சரக்கு தளம் 3-ஐ ஆழப்படுத்தும் பணி 2025 பிப்ரவரியில் முடிவடையும். கப்பல்கள் வந்து செல்லும் நுழைவு வாயில், கப்பல்கள் திரும்பும் சுற்றுப்பாதை ஆகியவற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது. வடக்கு சரக்கு தளம் 3-ஐ இயந்திரமயமாக்கும் திட்டத்தை 2026 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொது சரக்குகளைக் கையாளுவதற்கு வசதியாக பொறியியல், கொள்முதல், கட்டுமானம் அடிப்படையில் தோராயமாக ரூ. 80 கோடியில் சரக்குதளம் 10 அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கெனவே 10.70 மீட்டர் மிதவை ஆழமுள்ள இத்தளத்தை 14.50 மீட்டராக ஆழப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு சரக்கு தளம் 2-இன் செயல்திறனை அதிகரிக்க, அங்கு ஒரு நாளுக்கு கூடுதலாக 25ஆயிரம் டன் சரக்குகளைக் கையாளும் நோக்கத்துடன் 100 டன் திறன் கொண்ட நகரும் பளு தூக்கி இயந்திரம் 2025 ஜனவரி யில்நிறுவப்படவுள்ளது.

வடக்கு சரக்கு தளம் 2, 3 ஆகியவற் றில் தலா 5 ஆயிரம் ச.மீ. பரப்பு கூடுதலாக உருவாக்கப்படும் பணி நிகழாண்டுக்குள் முடியும். இதுகுறித்து, துறைமுக ஆணையத் தலைவர் சுசந்த குமார் புரோஹித் கூறும்போது, பல்வேறு இயற்கையான தனித்துவ சிறப்பம்சங்கள், வரவுள்ள தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் வ.உசி. துறைமும் தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாகத் திகழும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT