முகப்பு
நாமக்கல்லில் ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தமிழ்நாடு

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Updated On : 30 டிசம்பர், 2024 at 2:48 AM
நாமக்கல்லில் ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
பகிர்:

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில், சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை தரிசிக்க வருகின்றனர். இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை தினத்தில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டில் திங்கள்கிழமை ஆஞ்சனேய ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடை மாலை சாத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் வடை மாலை அகற்றப்பட்டு, சுவாமிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலான சிறப்பு அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா இன்று தொடக்கம்! -விழாக்கோலம் பூண்டது கன்னியாகுமரி

ஆஞ்சனேயரை தரிசிக்க இலவச தரிசனத்திலும், ரூ.250 கட்டணத்திலும் வருவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சாத்தப்படியான வடைகள் பொட்டலமிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும். பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் நாமக்கல் கோட்டை சாலை, பூங்கா சாலைப் பகுதி முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500–க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனனர்.

முழு கட்டுரையைப் படிக்க →