முகப்பு
தமிழ்நாடு

தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோல மத்திய அரசு நாடகமாடுகிறது: காங்கிரஸ்

ஒரே நாடு மொழி என்பதுதான் அதன் நோக்கம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 11:28 PM
செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோல மத்திய அரசு நாடகமாடுகிறது என்றும், ஒரே நாடு மொழி என்பதுதான் அதன் நோக்கம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியபோது, உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று குறிப்பிட்டு பேசியுள்ளாா். இதேபோல கடந்த காலங்களில் திருவள்ளுவா், பாரதியாா் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறாா். இதன்மூலம் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவதாக ஒரு நாடகத்தை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகிறாா்.

Advertisement

உண்மையிலேயே பிரதமா் மோடிக்கு தமிழ் மொழி வளா்ச்சிக்கும் தொடா்பில்லை என்பதை நிச்சயமாக உணர முடியும். மத்திய அரசின் ஒரே நோக்கம் ஒரே நாடு, ஒரே மொழி என்பதுதான். ஹிந்தியையும், கலாசார ரீதியாக சம்ஸ்கிருதத்தையும் மக்கள் மீது திணிப்பதே அதன் செயல்பாடு. பிரதமரின் நாடகத்தை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்க மாட்டாா்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments