தமிழ்நாடு

தமிழக ஆளுநருடன் விஜய் சந்திப்பு!

தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்தது பற்றி...

DIN

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து விஜய் மனு அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது எனப் பல்வேறு முரண்கள் இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திங்கள்கிழமை நேரில் சந்தித்த விஜய், அண்ணா பல்கலை. சம்பவத்தில் நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு முதல் முறையாக தமிழக ஆளுநரை நடிகர் விஜய் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT