வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 உயர்வு!
19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு வியாழக்கிழமை உயர்ந்துள்ளது.
சென்னை: 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு வியாழக்கிழமை உயர்ந்துள்ளது.
சா்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | பே-டிஎம் பேமன்ட் வங்கி: பிப். 29 முதல் ஆா்பிஐ தடை
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை(பிப்.1) வெளியிட்ட விலை நிலவரம் குறித்த அறிவிக்கையில், “உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட வா்த்தக பயன்பாட்டு சிலிண்டா் விலை ரூ.12.50 அளவுக்கு உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் ரூ. 1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்து ரூ.1,937 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும், வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தொடா்ந்து ரூ. 918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.