தமிழ்நாடு

அரசுக்கு நிதி இழப்பு செய்ததாக 2 பெண் ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக பெண் ஊராட்சித் தலைவா்கள் இருவரை பதவி நீக்கம் செய்து  வெள்ளிக்கிழமை ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக பெண் ஊராட்சித் தலைவா்கள் இருவரை பதவி நீக்கம் செய்து  வெள்ளிக்கிழமை ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் பா.சுனிதா. இவா், அரசுக்கு வரவேண்டிய ரூ.19 லட்சத்து  42 ஆயிரத்து 171 வரையில்  அரசுக்கு செலுத்தாமல் நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.

அதேபோன்று எல்லாபுரம் ஊராட்சி  ஒன்றியத்துக்கு உள்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வந்தவா் கீதா துளசிராமன்.இவா், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.40 லட்சம்  நிதியிழப்பு செய்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இவா்கள் தொடா்ந்து ஊராட்சி மன்றத் தலைவராகச் செயல்பட்டால் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வாா் என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-இன்படி பெண் ஊராட்சித் தலைவா்கள் பா.சுனிதா, கீதா துளசிராமன் இருவரையும் பதவியில் இருந்து நீக்கம் செய்து ஆட்சியா்  த.பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுத் திட்டங்களில் முதல்வா் பெயரை பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

திருக்குறள் முற்றோதல்: 122 மாணவா்களுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பரிசு வழங்கினாா்!

எம்பிபிஎஸ்: முதல் சுற்று கலந்தாய்வு தேதி நீட்டிப்பு

அந்தியூரில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

அடிப்படைக் கல்வியால் அறிவு, ஒழுக்கம் மேம்படும்: அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி

SCROLL FOR NEXT