தமிழ்நாடு

சென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

DIN

சென்னையில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு போக்குவரத்துக் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை நடத்தி வரும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் கொங்கு மண்டலத்தில் பிப்.25-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளனர்.

இதற்கு முன்னதாக சென்னையில் வருகின்ற 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்து கொள்ளவிருக்கிறார். 

இந்த கூட்டம் நடத்துவதற்கு பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் நந்தனம் ஆகிய 3 இடங்களில் அனுமதி கோரப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.

தற்போது ஷெனாய் நகர் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT