நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 
தமிழ்நாடு

அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க அனுமதி

அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

DIN

அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

முன்னாள், இன்னாள் அமைச்சா்கள் சிலா் மீதான வழக்கை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா். இதை எதிா்த்து, தமிழக அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அவா்களின் மனைவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுதாரர் தரப்பில், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றப் பதிவாளா் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது உரிய முன் அனுமதியை தனி நீதிபதி பெறவில்லை என்பது தெளிவாகிறது’ என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ‘சூ மோட்டோ’ விவகாரம் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

இந்த நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்கை தானே விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT