முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜிநாமா!

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 4:54 PM
செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
பகிர்:

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், 6 மாதங்களுக்கும் மேலாக துறை இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →