செந்தில் பாலாஜி(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ராஜிநாமா: ஆளுநர் ஒப்புதல்

அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ராஜிநாமா கடிதத்திற்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், 8 மாதங்களுக்கும் மேலாக துறை இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

நேற்று, செந்தில் பாலாஜி, அவரது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை தமிழக அரசின் பொதுத் துறையிடம் நேற்று அவர் வழங்கினார்.

பின்னர், இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT