சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா 
தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை!

DIN

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் பிப்.15-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், தொடா்ந்து பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.

இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்களுடன் அமைச்சா்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்த நிலையில், பிப்.14-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகம் வராத அரசு ஊழியர்களுக்கு அன்றைய நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு சம்பந்தப்பட்ட அலுவலக நிர்வாகி காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT