மக்களவைத் தேர்தல்: விருப்ப மனுவைப் பெற திமுக தலைமை அழைப்பு
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்களை பிப். 19 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைமை அழைப்புவிடுத்துள்ளது.
தமிழ்நாடுமக்களவைத் தேர்தல்: விருப்ப மனுவைப் பெற திமுக தலைமை அழைப்பு
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்களை பிப். 19 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைமை அழைப்புவிடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்களை பிப். 19 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தலைமை அழைப்புவிடுத்துள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் பிப். 19 ஆம் தேதி அண்ணா அறிவாலத்தில் உள்ள தலைமை அலுவலத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்பும் திமுக உறுப்பினர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் திமுக தலைமை அலுவலகத்தில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 எனவும், விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.2000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.