கோப்புப்படம் 
தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜஸ்டின் (வயது 53) த/பெ. ஜோசப்பின் என்பவர் இன்று (15.2.2024) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம், அக்கினியானா குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர்ஜஸ்டினை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் மீண்டும் போதைக் காளான் விற்பனை

மின்சாரம் பாய்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவா் பி.வி.கரியமால் காலமானாா்

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT