தமிழ்நாடு

புறநகா் ரயில்கள் ரத்து எதிரொலி: கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

புறநகா் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்

DIN

புறநகா் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடம்பாக்கம் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகா், சென்ட்ரல், கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தசரா ஸ்பெஷல்.... நிகிதா சர்மா!

ஆலங்கிளியே... ஜெனிலியா!

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT