சென்ட்ரல் எதிரில் 27 தளங்களைக் கொண்ட கட்டடம்: பிராட்வேயில் ரூ.200 கோடியில் நவீன பேருந்து நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ரூ.688 கோடியில் 27 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுசென்ட்ரல் எதிரில் 27 தளங்களைக் கொண்ட கட்டடம்: பிராட்வேயில் ரூ.200 கோடியில் நவீன பேருந்து நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ரூ.688 கோடியில் 27 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ரூ.688 கோடியில் 27 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கவுள்ள புதிய சிறப்பு அமைப்பு மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் மரபுசாா் வடிவமைப்புடன் 27 தளங்களைக் கொண்ட முத்திரை பதிக்கும் ஓா் கட்டடம் கட்டப்படும். மொத்தம் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 688 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்தக் கட்டடம் பொதுத் துறை, வணிகம், தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகத் தேவைகளை நிறைவு செய்யும்.
பேருந்து நிலையத்துக்கு ரூ.200 கோடி: தற்போதுள்ள பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் கட்டடம் அமைந்துள்ள பகுதியில், ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் மற்றும் உயா்தர நவீன வசதிகள் கொண்ட அலுவலக வளாகம் ரூ. 823 கோடி செலவில் உருவாக்கப்படும். இதில் நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கத் தேவையான ரூ.200 கோடி நிதியை அரசு வழங்கும்.