முகப்பு
தமிழ்நாடு

வதந்திகளை நம்ப வேண்டாம்: தமிழக வெற்றிக் கழகம்

வதந்திகளை நம்பவேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2024 at 12:03 PM
Vijay
பகிர்:

உறுப்பினர் சேர்க்கை குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று தமிழக வெற்றிக்கழகம் விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் படிவம் பொய்யானது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை, கட்சி சார்பில் அறிமுகம் செய்யப்பட உள்ள செயலி மூலம் மட்டுமே நடைபெறும். தோழர்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

யூகத்தின் அடிப்படையில் விஷமத்தனமாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியாகும் தகவல்களே உண்மையானவை என்றும் அதிகாரப்பூர்வ செயலியில் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் சேர்க்கைக்கென சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோல, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →