முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

உச்ச நீதிமன்றம் பா.வளர்மதி வழக்கிற்கு இடைக்கால தடை விதிப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2024 at 4:33 PM
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயா் நீதிமன்றம் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடா்பான வழக்கை நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது பா. வளா்மதி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தீா்ப்பு வெளிவந்த பத்து வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல. மக்களவைத் தோ்தல் நெருங்கும் வேளையில் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதால் பல்வேறு தாக்கம் ஏற்படலாம் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா். 2001 முதல் 2006-ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றபோது அதில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவா் பா. வளா்மதி. அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அவா் மீதும் அவரது குடும்பத்தினா் மீதும் பின்னா் நடைபெற்ற திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் 2012-இல் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீா்ப்பளித்தது. இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா். அதைத்தொடா்ந்து குற்றம்சாட்டப்பட்ட வளா்மதி மற்றும் அவரது குடும்பத்தினா் அக்டோபா் 12-க்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா். மேலும் இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் தினந்தோறும் நடைபெறும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பா. வளா்மதி சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →