தமிழ்நாடு

வேலூர் அருகே கார் விபத்து: ஓய்வுபெற்ற மருத்துவர் பலி

DIN

வேலூர்: வேலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்ப இடத்திலேயே வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஓய்வுபெற்ற மருத்துவர் உயிரிழந்தார்.

வேலூர் (சிஎம்சி) மருத்துவமனையில் ருமட்டாலஜி பிரிவு முதன்மை மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் டெபாசிஸ் தண்டா. இவர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் அருகே உள்ள அலமேலு மங்காபுரம் மேம்பாலத்தில் தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மேம்பாலத்தில் அதிவேக பாதையில் ( Fast line) சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓய்வுபெற்ற முதன்மை மருத்துவர் டெபாசிஸ் தண்டா உயிரிழந்தார். இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆம்புலன்ஸ் வரவழைத்து உடலை ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபலமான மருத்துவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

சிறகடிக்க ஆசை...!

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

SCROLL FOR NEXT