மாசி மக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடிய பக்தர்கள். 
தமிழ்நாடு

கும்பகோணத்தில் மாசி மக விழா: மகாமகக் குளக்கரையில் தீர்த்தவாரி

பக்தி பரவசம்: கும்பகோணம் கோயில்களில் மாசி மக உற்சவ கோலாகலம்

DIN

கும்பகோணம்: கும்பகோணத்தில் சைவ, வைணவ கோயில்களில் மாசி மக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழாவையொட்டி, கும்பகோணம் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கெளதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கியது. இக்கோயில்களில் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, வீதி உலா நடைபெற்றது.

மாசி மக விழாவையொட்டி கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் தேரோட்டம்.

இதேபோல, நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா ஏக தின உற்சவமாக சனிக்கிழமை நடைபெற்றது.

முக்கிய வைபவமான மாசி மக தீர்த்தவாரி மகா மகக் குளக்கரையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், 10 கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, பிற்பகல் 12.30 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்குக்கான பாலாலயமும், கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் கொடி மரம் திருப்பணிக்கான பாலாலயமும் செய்யப்பட்டுள்ளதால், நிகழாண்டு மாசி மக விழா நடைபெறவில்லை.

மாசி மக விழாவையொட்டி கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சாரங்கபாணி கோயில் தெப்ப உற்சவம்.

வைணவத் தலங்களில்...:

வைணவத் தலங்களான சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய கோயில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று வந்தன. மாசி மகத்தையொட்டி, சனிக்கிழமை சக்கரபாணி கோயில் திருத்தேரோட்டமும், பொற்றாமரை குளத்தில் சாரங்கபாணி கோயில் தெற்ப உற்சவமும், ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப் பெருமாள் கோயில்களில் சப்பரமும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT