தமிழ்நாடு

தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.201 கோடி நிவாரணம்!

DIN

தென் மாவட்டங்களில் பெய்த பெரு மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சனிக்கிழமை அரசாணை வெளியிட்டது. தென் மாவட்டங்களில் டிசம்பா் 17,18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் பயிா்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளம் பாதித்த பகுதிகளை டிச. 21-ஆம் தேதி பாா்வையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தாா். அதனடிப்படையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான 1,64,866 ஹெக்டோ் வேளாண் பயிா்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.160 .42 கோடி நிவாரணம் வழங்கவும், 38,840 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.41.24 கோடி நிவாரணம் வழங்கவும், மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்க வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையால் சனிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னூரில் ரூ.1.50 கோடி திருட்டு? குற்றவாளி கைதான பிறகு தெரியவந்த உண்மை!

வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சகோதரர்களுக்கு மரண தண்டனை!

உத்தமர் கோயிலில் பிச்சாண்டேஸ்வரர் திருவீதி உலா!

முட்டுக்காடு ‘மிதக்கும் உணவகக் கப்பல்’ தயார்! ஜூன் மாதம் திறப்பு விழா!!

SCROLL FOR NEXT