தமிழ்நாடு

ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்

DIN

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளிட்டுள்ள அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்.

இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் சிக்கிய நிலையில் கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

SCROLL FOR NEXT