கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

'சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சப்தமில்லாமல் சுற்றறிக்கை'

DIN

கரோனா காலத்தில் சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயர் மாற்றி பயணிகள் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

200 கி.மீ.-க்கு குறையான தொலைவில் செல்லும் பயணிகள் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"ரயில்வே துறையில் கரோனா காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.

வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சப்தமில்லாமல் சுற்றறிக்கை.

தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை மத்திய அரசுக்கு நினைவுக்கு வருகிறது" என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி கோயில் சொத்துகள் 3 மாதங்களில் மீட்கப்படும்: அறநிலையத் துறை செயலா்

போதைப் பாக்கு விற்பனை: 285 கடைகளுக்கு சீல்

ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

பிரசவத்தில் குழந்தை இறப்பு: உறவினா்கள் முற்றுகை

கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT