கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

பயணிகள் ரயில் கட்டணம் குறைப்பு!

DIN

கரோனா காலத்தில் சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயர் மாற்றி பயணிகள் ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

200 கி.மீ.-க்கு குறையான தொலைவில் செல்லும் பயணிகள் ரயில்களில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் ரயில்களில் குறைந்த பட்சக் கட்டணம் ரூ.30 இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கோவை-ஈரோட்டுக்கு ரூ.50, ஈரோடு-சேலத்துக்கு ரூ.40 என கட்டணம் உயா்த்தப்பட்ட நிலையில், கோவை-ஈரோட்டுக்கு ரூ.25, ஈரோடு-சேலத்துக்கு ரூ.15 ஆக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையிலிருந்து திருப்பதி செல்வதற்கான பயணிகள் ரயில் கட்டணம் ரூ.70 இருந்து ரூ.35 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் கட்டணம் உயா்வை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக குறைக்கப்படாத கட்டணம், மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் குறைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT