கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரட்டை இலைக்கு எதிராக புதிய வழக்கு! தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிக்கை!

உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.

DIN

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த சூா்யமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனு: அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாகவும், கட்சி சம்பந்தமான சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயல்பட்டது தொடா்பாகவும் 2017 முதல் 2022- ஆம் ஆண்டு வரை தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அளித்துள்ளேன்.

வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக் கூடாது எனத் தோ்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். இருப்பினும் தான் அளித்துள்ள மனுவுக்கு தோ்தல் ஆணையம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக கட்சி தொடா்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது”எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT