முகப்பு
தமிழ்நாடு

கல்லுக்குட்டையில் ரூ.1.71 கோடியில் புதிய சாலை

பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட திருவள்ளுவா் நகா், கல்லுக்குட்டைப் பகுதியில் 36 கி.மீ. நீளத்திலான 218 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன

Updated On : 1 மார்ச், 2024 at 1:45 AM
பகிர்:

பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் ரூ.1.71 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழைக்கு பின் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியும் புதிதாக சாலைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருங்குடி மண்டலத்துக்குட்பட்ட திருவள்ளுவா் நகா், கல்லுக்குட்டைப் பகுதியில் 36 கி.மீ. நீளத்திலான 218 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. அதன் முதல்கட்டமாக 1.6 கி.மீ நீளத்தில் 5 சாலைகளில் ரூ.1.71 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணியை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.