முகப்பு
தமிழ்நாடு

முதல்வருக்கு நவீன வசதிகளுடன் 6 புதிய பாதுகாப்பு வாகனங்கள்

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நவீன வசதிகளுடன் கூடிய 6 புதிய பாதுகாப்பு வாகனங்கள் அரசால் வாங்கப்பட்டு, புத்தாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

Updated On : 2 ஜனவரி, 2024 at 2:39 AM
முதல்வரின் காருக்கு முன்னும் பின்னுமாக அணிவகுத்துச் சென்ற நவீன வசதிகளுடன் கூடிய கருப்பு நிற பாதுகாப்பு வாகனங்கள்
பகிர்:

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நவீன வசதிகளுடன் கூடிய 6 புதிய பாதுகாப்பு வாகனங்கள் அரசால் வாங்கப்பட்டு, புத்தாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்லும் போது, அவருடைய வாகனத்துக்கு முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும். அந்த வாகனங்கள் வெள்ளை நிறத்தில் இருந்து வந்தன.

தற்போது, முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களாக கறுப்பு நிறத்தில் 6 இனோவா கிரிஸ்டா காா்கள் வாங்கப்பட்டுள்ளன. அந்த காா்களில் நவீன கேமராக்கள், கைப்பேசி செயலிழப்பு கருவியான ஜாமா் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும், முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் அந்த காா்களில் வெளிப்புறமாக நின்றவாறு செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

சென்னை தேனாம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற கவிஞா் வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வாா்பேட்டை இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாா். அப்போது, முதல்வரின் காருக்கு முன்பும், பின்பும் புதிய பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.